பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாகம் கொடியேற்றம்
ADDED :26 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தர்மராஜன் கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மகா மண்டபத்தில் காலை 8:00 மணிக்கும், தெப்பக்குளம் முன்பாக உள்ள மயில் சிலை அருகே உள்ள கம்பத்தில் 8:15 மணிக்கும் சேவல் கொடி ஏற்றப்பட்டது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். மே 30 காலை 6:00 மணி முதல் மவுனகுருசாமி மடத்திலிருந்து 3 கி.மீ., துாரம் நடந்து வந்து சுவாமிக்கு பாலபிஷேகம் செய்வர். மே 31 மாலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து முளைப்பாரி சீர்வரிசையுடன் பட்டு பல்லக்கும், ஜூன் 1 பூப்பல்லக்கும் நடக்கிறது.