சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அமாவாசை வழிபாடு
ADDED :28 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத அமாவாசை வழிபாடு இன்று நடந்தது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 10: 00 மணி வரை ஏராளமான பக்தர்கள் மலையேறினர். ஓடைகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கோயிலில் அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு, பேரையூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.