பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
ADDED :28 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 10.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சாற்றப்பட்டு, பால், தயிர், நெய், பழங்கள் உள்ளிட்டவை சாற்றப்பட்டன. அதன் பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்ற எழுதிய வெற்றிலையையும், புடவைகளையும் யாக குண்டத்தில் சாற்றினர். பின்னர் தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.