வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா
ADDED :39 days ago
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன் திருவிழாவில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மே.12 சாமி சாட்டுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.நேற்று பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே.20 அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்த னர்.