திருமலைக்கேணி முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு
ADDED :19 hours ago
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு பால், பழம், பன்னீர், விபூதி உட்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ரெட்டியார்சத்திரம் : தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம், திருவாசக முற்றோதலுடன் விசேஷ பூஜைகள் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.