உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் மகா உற்சவம் துவக்கம்

புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் மகா உற்சவம் துவக்கம்

 புதுச்சேரி: புதுச்சேரி திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில், 40ம் ஆண்டு மகா உற்சவம் இன்று காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, பஞ்சமூர்த்தி மற்றும் ரிஷப வாகனத்தில் சுவாமி  வீதிவுலா நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை 7:00 மணிக்கு சந்திரசேகரர் வெள்ளி பல்லக்கில் வீதியுலா, காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடக்கிறது.  முக்கிய விழாவாக, வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம், இரவு 7:00 மணிக்கு அறுபத்து மூவர் வீதிவுலா நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 7:00 மணிக்கு திருத்தேர் வீதியுலா, 1ம் தேதி இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவம், 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 4ம் தேதி இரவு 7:00 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம், 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருமுறை உற்சவம், 6ம் தேதி காலை 9:00 மணிக்கு சங்காபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜேஸ் கண்ணா, ஆர்ச்சகர்கள் குருமூர்த்தி, சந்திரமோகன், கல்யாணசந்தரம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !