உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகருணை பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் 16ம் ஆண்டு பொங்கல் விழா

பெரியகருணை பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் 16ம் ஆண்டு பொங்கல் விழா

அவிநாசி: பெரிய கருணை பாளையம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் 16ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.

அவிநாசி அடுத்த பெரியகருணை பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் 16ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 18ம் தேதி கணபதி ஹோமம்,கிராம சாந்தி ஆகியவற்றுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், அலங்கார பூஜை, அம்மை அழைத்தல், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், அலகு குத்தி தேர் இழுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மஞ்சள் நீர் விழாவுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !