உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேஷ வாகனத்தில் வைகுண்ட சேவையில் வரதராஜ பெருமாள் உலா

சேஷ வாகனத்தில் வைகுண்ட சேவையில் வரதராஜ பெருமாள் உலா

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த 224 வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் சேஷ வாகனத்தில் பெருமாள் உலா வந்தார். எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இங்கு கொடி ஏற்றப்பட்டு பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கிறார். நேற்று காலை ராம அவதாரத்தில் பட்டு பல்லக்கில் உலா வந்தார். இரவு சேஷ வாகனத்தில் வைகுண்ட நாதனாக அருள்பாலித்தார். தொடர்ந்து வீதி உலா வந்த பெருமாளுக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். விழாவில் மே 26 காலை திருக்கல்யாணம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !