கோவையில் சுவாமி ஐயப்பனின் உருவ சிலையை தோளில் சுமந்து வலம் வந்த பக்தர்கள்
ADDED :3 hours ago
கோவை; மகா சாஸ்துரு சேவா சங்கம் சார்பில் கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் 18-ம் ஆண்டு சாஸ்தா ப்ரீத்தி மகோத்சவம் நடந்து வருகிறது இதில் இரண்டாம் நாள் சனிக்கிழமை சுவாமி ஐயப்பனின் உருவ சிலையை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு ஐயப்பன் பாடல்கள் பாடி யானையுடன் ஊர்வலம் வந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஐயப்பனின் திருவுருவமாக வடிவமைக்கப்பட்ட குத்துவிளக்கை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.