உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளர்பிறை அஷ்டமி: பைரவரை வழிபட தடைகளை தகர்த்து வெற்றி பெறலாம்!

வளர்பிறை அஷ்டமி: பைரவரை வழிபட தடைகளை தகர்த்து வெற்றி பெறலாம்!

மதுரை; வளர்பிறை அஷ்டமி என்பது அமாவாசைக்கு பிறகு வரும் எட்டாம் நாளைக் குறிக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் இந்த அஷ்டமி திதி, வழிபாட்டிற்கு உகந்தது: வளர்பிறை அஷ்டமி திதியானது, குறிப்பாக கால பைரவரை வழிபடவும் மிகவும் உகந்த நாளாகும். மேலும் காக்கும் கடவுளான மகாவிஷ்ணு மற்றும் கலைமகள் சரஸ்வதி, அன்னை துர்கை ஆகியோரை வழிபட மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. பணி தொடங்குதல்: புதிய முயற்சிகளைத் தொடங்கவும், சுப காரியங்களுக்கான ஆலோசனைகளை மேற்கொள்ளவும் இந்த திதி ஏற்றதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் ராகு காலத்தில் துர்கையை வழிபடுவது தோஷங்களைப் போக்கி நலம் சேர்க்கும் என்பது நம்பிக்கை.  இன்று செவ்வரளி சாற்றி பைரவரை வழிபடுவோம்.. சிறந்த பலன் பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !