உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா துவக்கம்

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா துவக்கம்

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் மே 28 திருக்கல்யாணமும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 31ம் தேதி மாலை நடைபெறுகிறது. ஜூன் 3ம் தேதி தெப்பமும், ஜூன் 4ம் தேதி புஷ்ப பல்லக்கும், விடையாற்றியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகம்மை, செயல் அலுவலர் அஜின் செய்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !