விடுமுறை நாள் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED :1 hours ago
ராமேஸ்வரம்: விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று விடுமுறை நாள் யொட்டி தமிழகத்தின் பலபகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதல் கோயில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை காத்திருந்து புனித நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, கோயில் மேலவாசல், அக்னி கடற்கரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார், ஒருவழிப்பாதையாக மாற்றி வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.