மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம்
ADDED :112 days ago
வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
மே 5ல் கம்பம் நடப்பட்டு திருவிழா துவங்கியதும் பத்து நாட்கள் மண்டகப் படிகளில் அம்மன் எழுந்தருளினார். அம்மனுக்கு மாவிளக்கு, தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 21ல் அம்மன் பூப்பல்லக்கில் நகர் வலம் வந்தார். மே 23ல் தேரோட்டம் நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.