பைரவர், சிவன் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
ADDED :85 days ago
அரியாங்குப்பம்: குரு பெயர்ச்சியையொட்டி, சொர்ண பைரவர் மற்றும் சிவன் கோவி லில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு நேற்று இடம்பெயர்ந்தார். அதையொட்டி, அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு சொர்ண பைரவர் கோவிலில், ராஜயோக குரு பகவானுக்கு நேற்று காலை விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து, கலச பூஜை, 1,008 ேஹாமம், மகா பூர்ணாஹூதி, 21 திவ்ய அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரானை நடந்தது. அதே போன்று, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.