உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்தூர் செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி நேர்த்திக்கடன்

சேத்தூர் செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி நேர்த்திக்கடன்

நத்தம்; நத்தம் சேத்தூர்-செல்வ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவையொட்டி கடந்த மே.17 கரந்தமலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கும், கம்பத்திற்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் கோவில் திருத்தேர்ச்சட்டம் ஏற்றுதலும், தோரணம் கட்டுதலும் நடந்தது. நேற்று பக்தர்கள் முளைப்பாரி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அக்னிசட்டி,கிடாய் வெட்டுதல் மற்றும் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து இன்று பாரிவேட்டை மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சேத்தூர் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !