உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

புதுச்சேரி செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

  புதுச்சேரி: குருவப்பநாயக்கன்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று நடந்தது.

குருவப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள செல்லமுத்து மாரியம்மன், ஐயனார், பிடாரியம்மன் கோவில் 19ம் ஆண்டு செடல் பிரம்மோற்சவம், கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.

கடந்த 24ம் தேதி பிடாரி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுதல், சிங்க வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் அய்யனாரப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு மற்றும் குதிரை விடுதல் உற்சவம் நடந்தது. நேற்று காலை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு செடல் உற்சவம், பகல் 12:00 மணிக்கு பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அன்பழகன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !