உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு புதிய வசதிகள்; திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு புதிய வசதிகள்; திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

விருதுநகர்; சாத்தூர், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக ரூ.23.67 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் திறக்கப்பட்டுள்ளன


இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வரும் பொதுமக்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் கூடுதல் மண்டபங்கள் மற்றும் மேம்படுத்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  இக்கோயிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் தொடர் கோரிக்கையால், கோயில் நிர்வாகம்சார்பில் கோயிலின் அருகே பக்தர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டது. மேலும் ரூ. 23.67 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைத் முதல்வர் விஜய் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து அறநிலையத்துறையில் 80 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !