உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவார பிரதோஷம்; சிவ தரிசனம் செய்ய நீண்டகால கஷ்டங்களும் நீங்கும்!

குருவார பிரதோஷம்; சிவ தரிசனம் செய்ய நீண்டகால கஷ்டங்களும் நீங்கும்!

பிரதோஷம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த ஒரு காலமாகும். வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவார பிரதோஷம் எனப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் சிவன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சகல பாவங்களையும் போக்கும்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், கடன் தொல்லைகள், மற்றும் நீண்டகால கஷ்டங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. பிரதோஷ காலத்தில், சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பும், மறைந்த பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பும் உள்ள மாலை நேரம் வழிபாட்டிற்கு உரியது. கோவிலில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசிப்பது சிறந்தது. இன்று சிவ தரிசனம் செய்து நீண்டகால கஷ்டங்கள் நீங்க பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !