உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று பக்ரீத்; பக்ரீத் பெருநாளும் பள்ளிவாசல் இமாம்களும்..!

இன்று பக்ரீத்; பக்ரீத் பெருநாளும் பள்ளிவாசல் இமாம்களும்..!

இமாம் என்றால் தலைவர் என்று பொருள். மக்களை ஆன்மிகரீதியாய் வழி நடத்தும் பொறுப்பாளர்களுக்கு இமாம் என்று சொல்லப்படும்.

இஸ்லாமிய பண்டிகைகள் பிறையை அடிப்படையாகக் கொண்டு அனுசரிக்கப்படும். நோன்பு பெருநாள் ஷவ்வால் பிறை ஒன்றில் நடைபெறும். ஹஜ்ஜூப் பெருநாள் துல்ஹஜ்பிறை பத்தில் நடைபெறும். பெரும்பாலும் நோன்பு பெருநாளை தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு வரும். அவற்றை இமாம் சரி செய்யவேண்டும். பக்ரீத் பெருநாளை ஒட்டி கூடுதலாக தக்பீர் சொல்ல வேண்டும். பெருநாளுக்கு முந்திய நாள் அரபா தினம் என்று சொல்லப்படும். ஐந்து நாட்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் விசேஷமாக இமாம் தக்பீர் சொல்லவேண்டும்.

அரபா உடைய தினம் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆனால் இங்கு இருக்கி றவர்கள் அரபு தேசத்தை போலவே தாங்களும் அரபா நோன்பு வைக்க வேண்டும் என்று அடம் பிடிப்பர்.

பிறையின் அடிப்படையில் தான் அரஃபா தினம் முடிவு செய்யப்படும். எங்கோ ஒரு இடத்தில் அரபா தினத்தை கொண்டாடுகின்றனர் என்பதற்காக நாமும் இங்கே அதை அனுசரிக்க முடியாது என்பதை விளக்கி அரபாவை புரியவைப்பது இமாமுடைய சவாலான பணியாக இருக்கிறது.

அடுத்து குர்பானி என்கிற ஒரு அமல். ஆடு, மாடு, ஒட் டகம் இவற்றை இறைவனுக்கான இந்த திருநாளில் அறுத்து பலியிட்டு அதனுடைய இறைச்சியை ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கிற இந்த வழக்கத்தை இமாம் விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

குர்பானி குறி த்து நபியின் வழிகாட்டல் தெளிவாக இருக்கிறது. பெருநாள் தொழுகைக்குப் பிறகே குர்பானி கொடுக்கப்பட வேண்டும்.

குர்பானி பிராணி பற்றி நிறைய சந்தேகங்களும் விளக்கங்களும் இமாமிடம் கேட்கப்படும். ஒவ்வொன்றுக்கும் பொறுமையாக அவர் பதில் சொல்லவேண்டும்.

கிராமங்களில் குர்பானி பிராணியை அறுக்க கட்டாயம் இமாம்தான் செல்ல வேண்டும். இமாமுக்கு அறுக்க தெரிந்தி ருப்பதோடு அந்த சமயத்தில் எழக்கூடிய சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். இப்போது இமாமுக்கு பகரமாக முஅத்தின் ( தொழுகை அழைப்பாளர்) அல்லது வேறு எவராவது அந்த பிராணிகளை அறுக்கின்றனர்.

ஒவ்வொரு மஹல்லாவிலும் 200 அல்லது 300 குர்பானி ஆட்டுத் தோல்கள் பள்ளிவாசலுக்கு தானமாய் தரப்படும். தோல்களை வாங்குவோர் ஒரு லாரியுடன் வருவர். ஐந்தாறு பள்ளிவாசல் தோல்களை சேர்த்து விலைக்கு வாங்கி செல்வர். இப்போ தெல்லாம் தோல்களுக்கு பெரிய அளவு கிராக்கி இல்லை. பள்ளிக்கு தோல்கள் வருவதும் விற்கப்படுவதும் இமாமின் கண் பார்வையில் மேம்போக்கான கண்காணிப்பில் இருக்கும்.

பெருநாளன்று நடத்த வேண்டிய உரையில் இப்ராஹீம் நபியுடைய தியாக வரலாறு கண்டிப்பாக சொல்லப்பட வேண்டும். நடப்பு அரசியலையோ நடப்பு விஷயங்களையோ கலந்து பேசக் கூடாது.

ஒரு பெருநாளன்று மக்கள் வரிசையில் தயாரா கி விட்டனரா -எனக் கேட்க மறந்து தொழுகையை துவக்கியதற்காகவே ஒரு இமாம் பதவி நீக்கம் செய்யப்படுகிறார் .

மக்களின் மனங்களை வென்றெடுத்து விட்டால் அதற்குப் பிறகு இமாம் சொல்வதை எல்லாம் மக்கள் சமூகம் கேட்கும்.

இமாம் என்பவர் இஸ்லாமிய சமுதாயத்தின் வழிகாட்டி. தொழுகை, திருமணம், இறுதி காரி யம் போன்ற விஷயங்களை முன் நின்று நடத்திக் கொடுப்பவர். உஸ்தாத் என்பவர் அரபி மார்க்கச் சட்டங்களை கற்றுக் கொடுப்பவர் இமாம்களை உருவாக்குபவர்.

இமாமாகவும் உஸ்தாத் ஆகவும் இருப்பவர்கள் வெகுகுறைவு. பெரும்பாலும் இமாமாக மட்டும் இருப்பர் அல்லது உஸ்தாதாக மட்டுமே இருப்பர்.

மார்க்க அறிஞர்களுக்கு மாத ஊதியம் வெகு குறைவு 12,000 முதல் 26,000 வரைக்கும் கிடைக்கிறது.

சொந்தமாக டியூஷன் அல்லது மார்க்க சொற்பொழிவிற்கு சென்று அதன்மூலம் வருவாய் ஈட்டக் கூடியவர்கள் இருக்கின்றனர்.

இமாம்கள் உடைய உடை பெரும்பாலும் வெள்ளை நிற ஜிப்பா கைலி அல்லது பைஜாமா குர்தா இவைகளாகத்தான் இருக்கும். வெகு சிலர் மட்டுமே வேலைநேரம் அல்லாத நேரங்களில் வேறு உடைக்கு மாறுவர்.

இமாம்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் இந்த துறையில் ஈடுபடுத்துவது இல்லை அதற்கு பிரதான காரணம் பொருளாதாரம்தான்.

முன்னர் மார்க்கக் கல்வி படித்து இமாமாக வருவதற்கு பள்ளிப்படிப்பு வராதவர்கள் மக்கு குழந்தைகள் ஊருக்கு அடங்காத குழந்தைகள் என்று வருவர். இப்போது நிலை மாறி இருக்கிறது. நன்றாக படிக்கிறவர்கள் வருகின்றனர். அரபிக் கல்வியோடு பொதுகல்வியும் இணைந்து படிக்கின்றனர்.

குர்பானி இறைச்சியை எல்லாருக்கும் கொடுப்பதை போல இமாம்களுக்கும் கொடுப்பதுண்டு. இமாம் என்பதனாலே கொஞ்சம் அதிகமாக கொடுப்பதுண்டு. முன்னர் ஆர்வமாக வாங்கிய இமாம்கள் இப்போது குர்பானி கறி அதிகம் வாங்குவதில்லை.

குர்பானி கொடுக்கிற அளவுக்கு வசதி படைத்த இமாம்கள் வெகுகுறைவு. சிலர் கூட்டுக்குர்பானியில் கலந்து கொள்கின்றனர். கூட்டு குர்பானி கொடுப்பவர்கள் சமயங்களிலே தங்களது பங்கு இறைச்சியை யாருக்காவது அன்பளிப்பு செய்து விடுங்கள் என்று சொல்லி அதைக் கூட வாங்குவதில்லை.

இமாம்களுக்கு ஓய்வு பெறுவதற்கான வயது கிடையாது. அவர்கள் ஆரோக்கியம் இருக்கிற வரைக்கும் வேலையில் தொடர்வர்.

தொ டர முடியாது போனால் அல்லது நிர்வாகம் இடைநிறுத்தம் செய்தால் அவர்களுக்கு எந்த தொகையும் வழங்கப் படுவதில்லை. இப்போ து தான் ஒரு சில இடங்களில் பணி நிறைவின் போது அவர்களு க்கு ஒரு தொகை கொடுத்து ஊக் குவிக்கின்றனர்.

மொத்தத்தில் அர்ப்பணிப்பு இமாம்கள் மலக்குகளுக்கு சற்று கீழே சகமனிதர்களுக்கு சற்று மேலே.

எம்.ஏ. ஷாஹுல் ஹமீது ஜலாலீ

லாப நஷ்டக் கணக்கு இல்லை இங்கே!

ஆ று படுக்கையறைகள் கொண்ட பங்களா அது. ஒரு படுக்கையறையில் சம்மணமிட்டு அமர்ந்து அலாவுதீன் ‘அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்’ என திக்ர் எடுத்துக் கொண்டிருந்தார்.

அலாவுதீனுக்கு வயது 45. ஆறடி உயரம். தலையில் பச்சைநிற துணித்தொப்பி. கச்சிதப்படுத்தப்பட்ட தாடி. அழகிய பல்வரிசை. இறைஞானம் ததும்பும் கண்கள்.

அலாவுதீன் ஒரு தொழிலதிபர். அவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உண்டு. மகளின் பெயர் ஜன்னத்துல் பிர்தௌஸ். மகனின் பெயர் யாகூப் பத்ருதீன்.

திக்ர் முடித்து எழுந்த தந்தையை மகனும், மகளும் ஓடிவந்து கட்டிக் கொண்டனர்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

எட்டு வயது மகள் ஜன்னத்துல் பிர்தௌஸ் வினவினாள். “அத்தா! பக்ரீத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. குர்பானிக்கு இன்னும் நாம ஆடு வாங்கலையே?”

கணவர், குழந்தைகளை பார்த்தபடி ஜாஸ்மின் நின்றிருந்தாள்.

சிரித்தார் அலாவுதீன். “இன்னைக்கி நாம சந்தைக்கு போய் ஆடு வாங்கப் போகிறோம்!”

“அத்தா ஒரு சந்தேகம்!”

“கேள்!”

“எந்தெந்த மிருகங்களை குர்பானி கொடுக்கலாமென மார்க்கம் சொல்லுது அத்தா?”

“ஆடு, மாடு, ஒட்டகம்!”

“கோழிகளை குர்பானி கொடுத்தால் என்ன?”

“என்னுடைய அனுமானத்திலிருந்து பதில் கூறுகிறேன். பொதுவாக கோழிகள் அதிகபட்சம் 2 கிலோ இருக்கும். அறுத்து சுத்தம் செய்தால் ஒன்றரை கிலோ மாமிசம் தேறும். பங்கு பிரித்தால் அதிகம் பேர் பயன் பெற முடியாது என்கிற காரணத்திற்காக, குர்பானி மிருகங்களில் ஒன்றாக கோழி சேர்க்கப்படவில்லை என நம்புகிறேன்!”

“சரியான பதில் அத்தா. என்ன மாதிரியான ஆடுகளை குர்பானி கொடுக்க வேண்டும் என மார்க்கம் சொல்லுது அத்தா?”

“குர்பானிக்கு ஆண் ஆடுகள், பெண் ஆடுகள் இரண்டுமே பொருத்தமானவை. ஆனாலும் மக்கள் ஆண் கிடாயைத்தான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். வெள்ளாடாய் இருந்தால் 1 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். செம்மறி ஆடாய் இருந்தால் ஆறு மாதம் பூர்த்தியாகி இருந்தால் போதும். குர்பானி ஆடு ஊனம் அற்றதாய், நோய் பீடிப்பு இல்லாததா ய், பார்வைக் குறைவு அற்றதாய் இருக்கவேண்டும். ‘‘பலவீனமான ஆடு குர்பானிக்கு உதவாது. குர்பானி ஆட்டுக்கு காதுகளோ, கொம்புகளோ அறுபட்டு இருக்கக்கூடாது. கர்ப்பமான ஆடுகளோ அல்லது குட்டி ஈன்று பால் கொடுக்கும் ஆடுகளோ குர்பானிக்கு தகுதியானவை அல்ல. குர்பானி ஆடு அசுத்தமான உணவுகளை உண்கிற ஆடாயும் இருக்கக்கூடாது!”

“உரிய விளக்கத்தை அள்ளி தந்துவிட்டீர்கள் அத்தா!”

“ஜென் பாப்பா இன்னைக்கி நாம சந்தைக்கு போய் எத்தனை கிடா வாங்கப் போறோம் தெரியுமா?”

“ஒண்ணுதானே?”

“இரண்டு வாங்கப்போறோம்... ஒவ்வொரு ஆடும் இருபத்தியஞ்சு இருபத்தியஞ்சு கிலோ!”

“எதுக்கத்தா ரெண்டு? நாம பணக்காரங்கன்றதை காட்ட ரெண்டு ஆடுகளை குர்பானி கொடுக்கணுமா?”

“அவசரப்படாதே... ஒரு ஆட்டை நாம குர்பானி கொடுக்கப்போறோம். இன்னொரு ஆட்டை மஹல்லால இருக்கும் ஒருத்தருக்கு ‘ஹிபா’ பண்ணப்போறோம்!”

“ஹிபா-ன்னா என்னத்தா?”

“ஹிபா -என்கிற வார்த்தை ‘ஹிபத்துன்’ ‘வஹாபா’ ‘ஹப்’ போன்ற வார்த்தைகளி லிருந்து வந்தது. ‘ஹிபா’ என்கிற வார்த்தைக்கு பரிசு அல்லது தானம் என்கிற பொருள் உண்டு. ஒரு பொருளை இன்னொருவருக்கு பரிசாய் அல்லது தானமாய் தருவதில் நான்கு நிலைகள் உள்ளன!”

“அதென்ன நான்கு நிலைகள் அத்தா?” யாகூப் வினவினான்.

“ஒன்று ஹிபா- நிபந்தனையற்ற பரிசு. இரண்டு ஜக்காத் - கட்டாயதர்மம். மூன்று சதகா - விருப்ப தர்மம். நான்கு வக்பு- நிபந்தனை தானம். நாம் ஆட்டை நிபந்தனையற்ற பரிசாய் ஒருவருக்கு கொடுக்கப் போகிறோம்!”

“ஹிபா-வாக எதை எதை கொடுக்கலாம்?”

“சொத்து, பணம், நிலம், அசையும் சொத்துகள் மற்றும் நகை. தந்தை மகளுக்கு திருமண பரிசாய் நகை தரலாம். ஒரு விவசாயி தனது விளைச்சலில் ஒரு பகுதியை அண்டை வீட்டாருக்கு ஹிபா-வாய் தரலாம்!”

“ஹிபா-வின் நிபந்தனைகள் என்னென்ன அத்தா?” யாகூப்.

“லாபநோக்கம் கூடாது. நிபந்தனைகள் கூடாது. விளம்பரம் தற்பெருமை கூடவே கூடாது. ஹிபா-மக்களிடையே நம்பிக்கை பச்சாதாபம் பரஸ்பரம் ஒத்துழைப்பை நல்குகிறது. ஹிபா- கொடுப்பவர் தெளிவான மனதுடன் சட்டப்படி ஒரு பொருளை பரிசாய் கொடுக்கும் தகுதி யுடன் இருத்தல் வேண்டும். ஹிபா-கொடுப்பது உடனடியாக முழுமையாக இருத்தல் வேண்டும். ‘நான் உனக்கு கொடுக்கிறேன்’ என்கிற அறிவித்தலோடு ‘ஹிபா’ நிறைவடைய வேண்டும். ‘‘பரிசை மனமுவந்து தருதல் ‘லீஜாப்!’ பரிசை முழுமனதுடன் ஒப்புக்கொள்ளுதல் ‘கபுல்!’ சுவாதீனம் ஒப்படைப்பு ‘காப்சா’ எனப்படும். ஹிபா-வை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்; யார் வேண்டுமானாலும் பெறலாம்!”

“எல்லாம் சரி அத்தா. ஆட்டை நம் மஹல்லாவில் யாருக்கு பரிசாய் தரப்போகிறீர்கள்?”

சிரித்தார் அலாவுதீன். “நம்ம பள்ளிவாசல் இமாம் நுாருல் அஹ்கம் ஜலாலீக்கு தான் இரண்டாவது ஆட்டை ‘ஹிபா’ செய்யப் போகிறேன்!”

“ஓ... அந்த ஒயிட் அண்ட் ஒயிட் மின்னலடிக்கும் வெண்மை உடையில் காட்சி அளிப்பாரே... அந்த ஹஜ்ரத்துக்கா? சரியான தேர்வு!”

“ஓகே குட்டீஸ் கேள்வி நேரம் முடிந்தது. சாப்பிட்டு விட்டு கிளம்புவோம் ஆடு பிடிக்க!”

சாப்பிட்டு முடித்தனர்.

சந்தையின் முன்போய் கார் நின்றது. மூவரும் இறங்கினர். ஆயிரக்கணக் கான ஆடுகளும், மாடுகளும் குழுமியிருந்தன.

அமோகமாய் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

ஒரு வியாபாரியிடம் போய் தந்தை, மகள், மகன் நின்றனர். இரண்டு தேன் நிற செம்மறியாடுகள் நின்றி ருந்தன. அம்சமான கொம்புகள். முழுமையான காதுகள். வாயையும் புட்டப்பகுதியையும் ஆராய்ந்தனர்.

அலாவுதீன் தனது கை களால் இரு ஆட்டின் உடல்களையும் முழுமையாக தடவிக் கொடுத்தார்.

ஆடுகளை கண்ணுக்கு கண் பார்த்தார். ஓர் இணக்கம் தெரிந்தது.

ஆடு விற்பவரும் ஆடுவாங்கும் அலாவுதீனும் துண்டுக்குள் கைவிட்டு பேரம் பேசினர். இரண்டு ஆடுகளுக்கும் 52,000 ரூபாய் பேசி முடித்தார் அலாவுதீன்.

பணத்தை ‘ஜிபே’ பண்ணி ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொண்டார் அலாவுதீன்.

இரு ஆடுகளும் குட்டியானையில் ஏற்றப்பட்டன. நான்கு அகத்திக்கீரை கட்டுகள் வாங்கி போட்டார் அலாவுதீன்.

ஓர் ஆட்டை தங்களது வீட்டில் கட்டிப் போட்டுவிட்டு ‘ஹிபா’ கொடுக்கப்படும் ஆட்டுடன் நுாருல் அஹ்கம் ஜலாலீ வீட்டுக்கு பறந்தனர்.

அந்த வாடகை வீட்டின் முன் போய் இறங்கினார் அலாவுதீன். உடன் ஜன்னத் மட்டும்.

வாகன சப்தம் கேட்டதும் இமாம் நுாருல் அஹ்கம் ஜலாலீ வெளியே வந்தார். லுங்கியும் காடா பனியனும் அணிந்திருந்தார்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

“நல்லா இருக்கீங்களா அல்ஹாபிழ் மௌலவி முப்தி நுாருல் அஹ்கம் ஜலாலீ?”

“இறைவனின் அருளால் நலம் நீங்கள்?”

“நானும். இமாம் இதுவரை நீங்கள் குர்பானி கொடுத்தது உண்டா?”

“இல்லை. அந்தளவுக்கு எனக்கு வசதி இல்லை!”

“இமாம்! (ஆட்டின் நைலான் கயிற்றை இமாமிடம் கையளித்து) இந்த ஆட்டை உங்களுக்கு ‘ஹிபா’ செய்கிறேன் எவ்வித நிபந்தனையும் இல்லாமல். மஹல்லா மக்களை ஆன்மிக ரீதியாய் உய்விக்கும் உங்களுக்கு என்னின் எளிய பரிசு!”

ஆட்டை வாங்கிக்கொண்ட இமாம் “உங்கள் பரிசை ஏற்றுக் கொண்டேன். ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!”

தந்தையும் மகளும் டன் கணக்கில் பேருவகை பொங்க வீடு திரும்பினர்.

-பக்ரீத்துக்கு முந்தினநாள் இரவு.

இமாம் கூவினார். “நாளை நாம குர்பானி கொடுக்க நிறுத்தி இருந்த ஆடு எங்கே?”

இமாமின் மனைவி சரக்சரக்கென்று 64 ஐநூறு ரூபாய் நோட்டுகளை எண்ணிக் காட்டினாள். “32,000 ரூபாய்க்கு அந்த ‘ஹிபா’ ஆட்டை வித்துட்டேன். நாம குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேர். மாசம் வாடகை, கரன்ட் சார்ஜ், அரிசி, பருப்பு, மளிகை சாமான், கல்வி செலவு, மருத்துவச் செலவு மற்றும் பெட்ரோல் செலவு பண்ணி விழி பிதுங்குது. மாசம் 10,000 சம்பளம் வாங்கும் அன்னாடங்காய்ச்சி இமாமுக்கு எதுக்குங்க குர்பானி ஆசை? இந்த பணத்தை வச்சு ஆறு மாசம் குடும்பத்தை ஓட்டுவேன். இப்படி வருஷம் ஒருத்தர் ஒரு ஆட்டை ‘ஹிபா’ கொடுத்தால் ஆறு ஆறு மாசம் அரைவயித்து கஞ்சி குடிக்கலாம்...”

“லாப-நஷ்டகணக்கு பார்த்து இமாம்கள் ஆன்மிகப்பணியில் ஈடுபடுவது இல்லை பெண்ணே... இறைவன் நமக்கு என்ன கொடுத்திருக்கிறானோ அது ந மக்கு போதுமானது. இறை வன் விரும்பினால் எதிர்கா லத்தில் நாமும் நம் சொந்த ச ம்பா த் தியத்தில் குர்பானி கொ டுப்போம் ...” என மனதிற்குள் மு ணுமுணுத்து சமா தானமானார் இமாம்.

ஹிபா ஆர்னிகா நாசர்

இறைவனின் நாட்டம்

சொன்னதை மறப்பதும் சொல்லிலே திரிவதும் அன்பினால் அறத்தை அப்படியே விடுவதும் முறையல்ல என்பதை உலகிற்கு உரைத்த உன்னத திருநாள்...!

ஊரார் பழி நீங்க உள்ளம் உருகி நின்று இறைஞ்சி பெற்றது இனிய மகனே எனினும் இறைவனுக்கு பலியிட இதயத்தை கல்லாக்கிய இப்ராஹீம் நபியின் தியாகத்தின் பெருநாள்...!

சொன்னது தந்தைதான் கொன்றிடக் கூடும் எனினும் தந்தையின் சொல்லை தலை மீது தாங்கி தானாய் இசைந்த இஸ்மாயில் நபியின் பேரன்பின் பெருநாள்...!

தியாகமும் பேரன்பும் பேச்சில் பிறழாமையும் உத்தமர் குணமே நரபலியை எப்போதும் இறைவன் நாடுவதில்லை என நாட்டுக்கு உணர்த்திய நன்மையின் ஒருநாள்...!

பங்கிட்டு வாழ்தலும் பசித்தோரைத் தேற்றலும் ஈகையும் இரக்கமும் இருகண்ணாய் போற்றலும் மனிதரை மனிதர் நேயமுடன் அணுகலும் இறைவனை அறிந்திட ஒருவழி என்றும் பாங்காய் சொல்லும் பக்ரீத் பெருநாள்...!

அல்லி பாத்திமா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !