குறையின்றி வாழ விரும்புவோர் கன்னியாகுமரி வாருங்கள்
கன்னி பெண்ணால் தான் தனக்கு மரணம் வேண்டும் என சிவனிடம் வரம்
பெற்றான் பாணாசுரன்.
இந்த சமயத்தில் சிவனை திருமணம் செய்யவேண்டும் என பகவதி என்ற
பெயரில் இத்தலத்தில் தவம் இருந்தாள் பார்வதி. அசுரனை வதம் செய்யும் பணியை பகவதியிடம் ஒப்படைக்க நினைத்தார் சிவன். அதனால் அவளுடைய தவத்தை ஏற்கவில்லை.
இதை அறியாததால் பகவதிக்கு கோபம் வந்தது. ஆனால் பாணாசுரனோ தன்னை திருமணம் செய்யுமாறு பகவதியை வற்புறுத்தினான். அப்போது கோபத்தின் உச்சத்தில் இருந்த பகவதி அவனைக்கொன்றாள். பின்னர் கோபம் தணிந்தது. இங்குள்ள அம்மன் குமரியாக இருப்பதால் இந்த தலத்தை ‘கன்னியாகுமரி’ என அழைக்கின்றனர்.
முன்பு அம்மனின் மூக்குத்தி ஒளியை, கலங்கரை விளக்கின் ஒளி என கப்பல் ஓட்டுபவர்கள் கருதியால் கப்பல்கள் பலமுறை விபத்துக்குள்ளானது. இதனால் கடற்கரை நோக்கி இருந்த வாசல் மூடப்பட்டு, வடக்கு நோக்கி வாசல் வைக்கப்பட்டது.
இந்தியாவின் தென்கோடி முனை கன்னியாகுமரி. முக்கடல் சேரும் இந்த கடலில் நீராடினால் குறைகள் நீங்கி நன்மை கிடைக்கும்.
குறைவின்றி வாழ விரும்புவோர் கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசியுங்கள்.
எப்படி செல்வது: கன்னியாகுமரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 11:00 மணி; மாலை 4:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 04652 – 246 223