உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி காசி விஸ்வநாதர் கோயிலில் வாயிற்படி அமைக்கும் பணி

செஞ்சி காசி விஸ்வநாதர் கோயிலில் வாயிற்படி அமைக்கும் பணி

செஞ்சி: செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் வாயிற்படி அமைக்கும் பணி நடந்தது.

செஞ்சி சிறுகடம்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விசாலாட்சியம்மன் சமேத காசிவிஸ்வநாதர் கோவிலை முற்றிலும் கருங்கற்களை கொண்டு 7 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று பிரதான வாயில், தெற்கு வாசல், கருவரை, அர்த்தமண்டபம், அம்மன் சன்னதிக்கு புதிய வாயிற்படி அமைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனையும், மகா தீபாராதனையும் செய்தனர். தொடர்ந்து வாயிற்படிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து நிலை நிறுத்தினர். இதில் திருப்பணி குழு தலைவர் ராஜா தேசிங்கு கல்வி குழும சேர்மன் பாபு, செயலாளர் சங்கர், பொருளாளர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள், சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !