உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை

திருப்புத்தூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஈதுல் அள்ஹா சிறப்பு தொழுகை நடத்தினர்.

திருப்புத்தூர் நகரிலுள்ள மஸ்ஜிதுன் நூர், அல்அக்ஷா, அச்சுக்கட்டு, மின் நகர், புதுப்பட்டி, சமஸ்கான், மதரஸா, தென்மாபட்டு, புதுத்தெரு உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களைச் சேர்ந்த ஜமாத்தார்கள், இமாம்கள் புத்தாடை அணிந்து பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து சிங்கம்புணரி ரோட்டிலுள்ள அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்தை வந்தனர். அங்கு சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜியும், திருப்புத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமுமான முகமது பாரூக் ஆலிம் தலைமையில் தொழுகை நடந்தது. தொடர்ந்து குத்பா எனும் பேருரை ஆற்றினார். இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். நிறைவில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதே போன்று தவ்ஹீத் ஜமாத் திருப்பத்தூர் கிளை சார்பாக ஹச் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டு துவா ஓதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !