உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்பத்தி செம்பாத்தம்மன் கோவிலில் தேர்திருவிழா

பொன்பத்தி செம்பாத்தம்மன் கோவிலில் தேர்திருவிழா

செஞ்சி; பொன்பத்தி செம்பாத்தம்மன் -பச்சையம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சி அடுத்த பொன்பத்தி திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத பிரசங்கம், அக்னி வசந்த உற்சவம், செம்பாத்தம்மன் திருத்தேர் விழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதலும், இரவு சுவாமி வீதி உலாவும் நடந்தது.5ம் நாள் திரவுபதியம்மன் விழாவாக திருக்கல்யாணமும், முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது.  
அதை முன்னிட்டு காலையில் செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், ஊரணி பொங்கல் மற்றும் கூழ் வார்த்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு செம்பாத்தம்மன் ,பச்சையம்மன், கிருஷ்ணர், அர்ஜுனன், திரௌபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் எற்றி வடம் பிடித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். தொடர் விழாவாக துரியோதனன் படுகளம், தீமிதி விழா, தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !