உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனகிரி புற்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புவனகிரி புற்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புவனகிரி: புற்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புவனகிரி அடுத்த பெருமத்துார் ஆற்றங்கரை தெருவில், புற்றுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கும்பாபிஷேக வழிபாடு, இன்று காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.  மாலையில்  வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் இரவு 8:00 மணிக்கு பூர்ணாஹுதியும், மகா தீபாராதனையும் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுக்கு பின் கடம் புறப்பாடு துவங்கி, விமானம் மற்றும் மூலவர் சன்னதியில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !