உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தநாயக்கன்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் தேரோட்டம்

சித்தநாயக்கன்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் தேரோட்டம்

சூலூர்; சித்தநாயக்கன்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சூலூர் அடுத்த செலக்கரச்சல் ஊராட்சி சித்த நாயக்கன்பாளையம் ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில் பழமையானது. இங்கு நடக்கும் பூச்சாட்டு திருவிழா மற்றும் தேரோட்டம் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம் துவங்கியது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஓம் சக்தி, பராசக்தி சரண கோஷங்களுடன் பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்தனர். கோவில் கமிட்டியினர் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !