உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ஹைகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் பூக்குழி இறங்கும் விழா

பழநி ஹைகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் பூக்குழி இறங்கும் விழா

நெய்க்காரப்பட்டி; பழநி நெய்க்காரப்பட்டி, பெரிய கலையம்புத்தூர் ஹை கோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி விழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பழநி, நெய்க்காரப்பட்டி, பெரிய கலையம்புத்தூர் நடுத்தெருவில் உள்ள ஹைகோர்ட் பத்ரகாளி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே 22, கொடிமரம் நடுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. மே 26,ல் அம்மனுக்கு காப்பு கட்டுதல், முகூர்த்தக்கால் நடுதல், சாமி சாட்டுதல் நடந்தது. ஜூன் 1, அன்று ரத ஊர்வலம், பால் குட ஊர்வலம் நடைபெற்றது. ஜூன் 2, பூக்குழி வளர்த்தல் மாலை ஆறு மணிக்கு துவங்கியது. அதன் பின் வானவேடிக்கை நடந்தது. நேற்று (ஜூன் 3,) காலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அதன் பின் கிடா வெட்டுதல், பூச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இன்று ஜூன் 4 மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !