சீர்காழி கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் தெப்பா உற்சவ விழா
மயிலாடுதுறை: சீர்காழி அருகே தற்காஸ் கல்யாண வெங்கடேசன் பெருமாள் கோயில் தெப்பா உற்சவ விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தற்காஸ் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் ப்ரம்மோத்ஸ்வம் மற்றும் தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கல்யாண வெங்கடேச பெருமாள் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் பல்வேறு நறுமணப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது . இரவும் கல்யாண வெங்கடேச பெருமாள் வீதி உலா காட்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கோவிலின் முன்புறம் அமைந்துள்ள குளத்தில் தெப்ப உற்சவ விழா நடைபெற்றது .இதில் கல்யாண வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் இணைந்து தெப்பத்தில் காட்சியளித்தார் இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வெளியூரிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் அறங்காவலர் நவநீத கண்ணன் ராமானுஜ தாசர் மற்றும் பாகவத அடிகளார் கிராமவாசிகள் செய்தனர்.