உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பிரதமர் மோடியின் பெயரில் அர்ச்சனை

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பிரதமர் மோடியின் பெயரில் அர்ச்சனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் பா.ஜ.,வினர் அர்ச்சனை செய்து வழிபட்டனர். 


பிரதமர் மோடி 2014 மே 26 ல் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 12 ஆண்டுகளாக பிரதமர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் நாட்டின் முதல் பிரதமரான நேரு 4398 நாட்கள் பணியாற்றிய சாதனையை பிரதமர் மோடி இன்று முறியடித்தார்.இதனை கொண்டாடும் விதமாக பா.ஜ., நிர்வாகிகள் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோயிலுக்கு வெளியே மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் கூறுகையில், நாட்டின் நீண்ட காலம் பொறுப்பில் உள்ள பிரதமர் என்ற சாதனையை பிரதமர் போடி படைத்துள்ளார். தொடர்ந்து அவரது ஆட்சி நீடிக்கவும், நீண்ட ஆயுளை வழங்கவும் பா.ஜ., சார்பில் பிரார்த்தனை நடத்தினோம் என்றார். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !