உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொம்மையசுவாமி, மல்லையாசுவாமி கோவில் ஆண்டு விழா; சிறப்பு பூஜை

பொம்மையசுவாமி, மல்லையாசுவாமி கோவில் ஆண்டு விழா; சிறப்பு பூஜை

உடுமலை: பொட்டையம்பாளையம் பொம்மையசுவாமி, மல்லையாசுவாமி கோவில் ஆண்டு விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் இன்று நடந்தது.


உடுமலை அருகே பொட்டையம்பாளையம் கிராமத்தில், பொம்மையசுவாமி, மல்லையாசுவாமி ஆகிய மூலத்தெய்வங்களுடன், ராஜகணபதி, காசிலிங்கம், சின்னம்மன், உமையவள் பார்வதி, பாலமுருகன், கன்னிமார், கருப்பராயன் சன்னதிகளுடன் கோவில் கும்பாபிேஷகம் இரு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இன்று கோவில் இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, ஆண்டு விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !