நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்
ADDED :9 hours ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவி கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாளகாளி கோவிலில் உள்ள பிரத்தியங்கராதேவிக்கு நேற்று அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாக வேள்விகள் துவங்கியது. பகல் 1:20 மணிக்கு யாக வேள்வியில் மிளகாய்வற்றல் கொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதியும், யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் மூலம் சுவாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது. பகல் 2:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.