உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  சிவ விஷ்ணு கோவிலில் புதிய உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை

 சிவ விஷ்ணு கோவிலில் புதிய உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் கோவிந்தசாமி நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவிலில் 5ம் ஆண்டு விழா உற்சவம், புதிய உற்சவர்கள் பிரதிஷ்டையுடன் நடந்தது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் கோவிந்தசாமி நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவிலில் 5ம் ஆண்டு விழா உற்சவம் நேற்று மாலை நடந்தது. மாலை 5:30 மணிக்கு மஹா கணபதி ஹோமங்களுடன் தொடங்கியது. புதிதாக கட்டப்பட்ட உற்சவர் மண்டபத்தில், மாலை 6:30 மணிக்கு புதிய உற்சவர்கள் சிலைகளான, அமிர்தகணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சோமாஸ்கந்தர், அபிராமி அம்பாள், வைகுண்டவாசபெருமாள், ஜனகவள்ளி தாயார், ஆண்டாள் நாச்சியார், சிவகாமி அம்மாள் நடராஜர், சீதாராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், பிரதோஷ நாயகர், நந்திகேஷ்வரர் ஆகிய சிலைகள் பிரதிஷ்டை செய்து, மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. 8:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. கோவில் அறக்கட்டளை நிறுவனர் சுப்பிரமணியன், ஆலய குருக்கள் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !