உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொம்மக்காள் கோயில் திருவிழா

பொம்மக்காள் கோயில் திருவிழா

ராஜபாளையம்: ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோட்டில் உள்ள பொம்மக்காள் கோயில் பொங்கல் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ராஜ கம்பளத்து நாயக்கர் சமூகம் சார்பில் செண்பகத்தோப்பு ரோடு தென்றல் நகர் முக்கிய பகுதியில் பொம்மக்காள் கோயில் அமைந்துள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை வைகாசி திருவிழா விமர்சையாக நடைபெறும். தென்காசி மாவட்டம் ராயகிரி, சிவகிரி, அருளாட்சி, தேவிபட்டணம் சஞ்சீவி மலை அடிவாரம் தொட்டியபட்டி, புதூர் எஸ். ராமலிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

விழாவை முன்னிட்டு ராக்காச்சி அம்மன் கோயில் பகுதி பாலாற்றில் புனித நீர் எடுத்து பெரிய மந்தை ஜக்கம்மாள் கோயில் நள்ளிரவு பூஜைக்கு பின் எலுமிச்சை, பூ வைத்து அம்மன் அருள் பெற்றபின் தீர்த்த குடம் எடுத்து பொம்மக்காள் கோயில் கொண்டு சென்று நள்ளிரவு அபிஷேகம் அலங்காரத்திற்கு பின் பூஜைகள், அன்னதானம் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !