உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொட்டகுளத்து அய்யனார் கோயில் முளைப்பாரி ஊர்வலம்

பொட்டகுளத்து அய்யனார் கோயில் முளைப்பாரி ஊர்வலம்

கமுதி: கமுதி அருகே பெரிய உடப்பங்குளம் கிராமத்தில் பொட்டகுளத்து அய்யனார் கோயில் வைகாசி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

நேற்றுமுன்தினம் கிராம மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூலவருக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. நேற்று முளைக்கொட்டு திண்ணையில் இருந்து மக்கள் முளைப்பாரி துாக்கி கிராமத்தின் முக்கிய வீதியில் சிறுமிகளின் கோலாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். அய்யனார் கோயிலில் வைத்து பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடினர். பின் முளைப்பாரியை தண்ணீரில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !