உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஹிந்து முன்னணி கோரிக்கை

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஹிந்து முன்னணி கோரிக்கை

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடத்த கோரி ஹிந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் பழமையான முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதன் காரணமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் தேரோட்டம் கடந்த 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகள் நடத்தப்படவில்லை.

கோவிலின் தொன்மை மரபான தேரோட்டம் நின்று போனது இப்பகுதி மக்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இவ்வாண்டு தேரோட்டத்தை கட்டாயம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஹிந்து முன்னணியினர் விழாக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் இந்தாண்டு நடத்த முடிவெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், ரிஷிவந்தியம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், ஊர் முக்கியஸ்தர்கள் கண்ணன், துரை, சின்னப்பிள்ளை, அமுதமொழி மற்றும் விழாக்குழுவினர் ஒன்றிணைந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதனை தொடர்ந்து, அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !