உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதரக்குடியில் கும்பாபிஷேகம்

பாதரக்குடியில் கும்பாபிஷேகம்

சிவகங்கை: காரைக்குடி அருகே பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ஜூன் 25 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோயிலில் ஜூன் 23 அன்று காலை 8:30 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்குகிறது.

அன்று இரவு முதல் கால யாகசாலை பூஜை, ஜூன் 24 ல் 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவு 9:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறும். ஜூன் 25 அன்று காலை 8:00 மணிக்கு கோபூஜை, சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெறும். காலை 11:00 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !