உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடசேமபாளையம் சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேகம்

வடசேமபாளையம் சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேகம்

சங்கராபுரம்: சங்கரபுரம் அடுத்த வடசேமபாளையம் கிராம சுப்பிரமணியர் கோவிலில் இன்று நடந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சங்கராபுரம் அடுத்த வடசேமபாளையம் கிராமத்தில் வள்ளி தெய்வாணை சமேத சுப்பிரமணியர் கோவில் புதிதாக கட்டப்பட்டு, இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி இன்று கோ பூஜை, வாஸ்து சாந்தி, யாக சாலைகள் பூஜைகள் நடந்தது. கோபுர கலசத்ததிற்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்கி வழிபட்டனர். சங்கராபுரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !