உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு 25 சவரன் மதிப்பிலான தங்கக் கிரீடம் காணிக்கை

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு 25 சவரன் மதிப்பிலான தங்கக் கிரீடம் காணிக்கை

பாலக்காடு; கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 25 சவரன் எடை கொண்ட நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க கிரீடத்தை, தொழிலதிபர் கோபு நந்திலத், காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார். கோவில் சோபனா படியில் வைத்து நடந்த நிகழ்வில் கோவில் நிர்வாக குழு தலைவர் கோபிநாத், நிர்வாகக் குழு உறுப்பினருமான பிரம்மஸ்ரீ மல்லிசேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, ராதா மற்றும் கோபு நந்திலத்தின் மனைவி ஷைனி கோபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். தீவிர பக்தரான கோபு நந்திலத், இதற்கு முன்னரும் இக்கோவிலுக்கு 3 யானைகளைக் காணிக்கையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !