பூத வாகனத்தில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்து அருள்பாலிப்பு
காஞ்சிபுரம்: ஆனி உத்திர பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான இன்று பூத வாகனத்தில் காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார்.
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோத்சவ பெருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துட்ன் தொடங்கியது. இதில், தினமும் காலை, 8:00 மணிக்கும், இரவு 7:30 மணிக்கும், மருகுவார் குழலி அம்பிகையுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் வழக்கறுத்தீஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அதன்படி முதல் நாள் உத்சவமான கடந்த 17 ம் தேதி காலை சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், இரண்டாம் நாள் உத்சவமான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் சுவாமி வீதியுலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான இன்று காலை பூத வாகனத்தில் உலா வந்தார். இரவு ராவனேஸ்வரர் உத்சவம் நடக்கிறது. நான்காம் நாள் உத்சவமான நாளை காலை நாக வாகனத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் சுவாமி வீதியுலா வருகிறார். ஐந்தாம் நாள் உத்சவமான 21காலை அதிகார நந்தி வாகனத்தில் உலா வருகிறார். இரவு 9:00 மணிக்கு மருகுவார்குழலி அம்பிகைக்கும், வழக்கறுத்தீஸ்வரருக்கும் திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.