உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 400 ஆண்டு பழமையான நல்லுார் ஈஸ்வரன் கோவிலில் 23ல் தேர்த்திருவிழா துவக்கம்

400 ஆண்டு பழமையான நல்லுார் ஈஸ்வரன் கோவிலில் 23ல் தேர்த்திருவிழா துவக்கம்

திருப்பூர்: திருப்பூர் – காங்கயம் ரோடு, நல்லுாரில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. கோவிலுக்குப் புதிய தேர்கள் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு முதல்முறையாக ஆனித் தேர்த்திருவிழா நடைபெற்றது.


இந்த ஆண்டிற்கான ஆனித் தேர்த்திருவிழா வரும் 22ல் அங்காளம்மன் கோவில் வழிபாட்டுடன் கிராம சாந்தி பூஜை, 23ல் கொடியேற்றம் நடைபெற உள்ளது. தினமும், காலை, 10:00 மணிக்கு, சோமாஸ்கந்தர் மற்றும் விசாலாட்சியம்மன் மஹா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறும். காலையில், மனோன்மணி அம்மன் உடனமர் ஸ்ரீசந்திரசேகரர் திருவீதியுலாவும், மாலையில் சோமாஸ்கந்தர் திருவீதிஉலாவும் நடைபெறும். வரும், 27ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு; 28ம் தேதி மாலை, திருக்கல்யாண உற்சவம், 29ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு மஹா அபிேஷகத்தை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் தேர்களில் எழுந்தருள உள்ளனர். மாலை, 5:00 மணிக்கு, தேர்வடம் பிடித்து, தேரோட்டம் நடைபெற உள்ளது. பின்னர், பரிவேட்டை, தெப்ப உற்சவம், நடராஜர் தரிசன காட்சி, மஞ்சள் நீர் அபிேஷகம், விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. சிவனடியார்களின் கயிலாய சிவவாத்தியம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் மற்றும் தினசரி கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !