உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா

திண்டிவனம்: திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இக்கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று இரவு 7:00 மணியளவில் நடந்தது.

இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழு நிர்வாகிகள் நடேசன், ரவிச்சந்திரன், பிர்லா செல்வம், விஜயன், குமார், சுரேஷ் மற்றும் பூசாரிகள் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !