உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  ஸ்ரீராமலிங்கேஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர ேஹாம விழா

 ஸ்ரீராமலிங்கேஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர ேஹாம விழா

 15 வேலம்பாளையம்: 15 வேலம்பாளையம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் சமேத ஸ்ரீராமலிங்கேஸ்வரர் கோவிலில், ஏகாதச ருத்ர ேஹாம விழா நடந்தது. நேற்று முன்தினம், காலை, 6:00 மணிக்கு, கணபதி ேஹாமம், மாலையில், விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்யம், சுவாமி ஆவாகனம், ஏகாதச ருத்ர பராயணம், சதுர்வேத பாராயணம் நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையுடன், ஏகாதச ருத்ர ேஹாமம் துவங்கியது. மூலமந்திர ஜெப ேஹாமம், சிறப்பு திரவியாகுதி, நிறைவேள்வி நடந்தது. மூலவருக்கு கலச அபிஷேகமும், உபச்சார பூஜைகளும் நடைபெற்றன. சிறப்பு அலங்கார பூஜையும், மஹா தீபாராதனையும் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !