உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத சுவாதி நட்சத்திர கருட சேவை நடந்தது.

பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி பிரம்மோற்ஸவம், சித்திரை திருவிழா நடக்கிறது. தொடர்ந்து பதினோராவது ஆண்டு ஆனி சுவாதி நட்சத்திர விழாவில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். தீபாராதனைக்கு பின் இரவு 8:00 மணிக்கு பெருமாள் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !