ஏரி காத்த கோதண்ட ராமர் கோவில் ஆனி மாத பிரம்மோத்சவ கொடியேற்றம்
ADDED :8 hours ago
மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்டராமர்கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவ கொடியேற்றம் விமரிசையாக நடந்தது. மூலவர் சன்னதியில்ராமர்- – சீதையை கைப்பற்றியவாறு திருமண கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த இத்தலத்திற்கு த்வியம் விளைந்த திருப்பதி என மற்றொரு பெயரும் உண்டு. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து ஆனி மாதத்தில், வருடாந்திர பிரம்மோத்சவ விழா துவங்கி, கொடியேற்றம் விமரிசையாக நடந்தது.