சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேக கருட சேவை
ADDED :1 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத ஜேஷ்டாபிஷேக விழாவில் கருட சேவை நடந்தது.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பரமஸ்வாமியாக வடக்கு திசை நோக்கி அருள் பாலிக்கிறார். கோயிலில் ஆனி மாத ஜேஷ்டாபிஷேக விழா நடந்தது. இதன்படி நேற்று காலை ஜேஷ்ட நட்சத்திரத்தில் உற்சவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் ஜேஷ்டாபிஷேகத்தை தரிசிப்பதன் மூலம் நோய் நொடிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதேபோல் தோஷங்கள் நீங்கி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மகா தீபாராதனை நடந்து வீதி உலா வந்தார். ஏளனமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.