உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் யானை வாகனத்தில் பெருமாள் உலா

ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் யானை வாகனத்தில் பெருமாள் உலா

மதுராந்தகம்; ஆனி மாத பிரம்மோத்சவத்தையொட்டி மலர் அலங்காரத்தில், யானை வாகனத்தில் கருணாகர பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்டராமர்கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவம் ஜூன் 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மூலவர் சன்னதியில்ராமர்- – சீதையை கைப்பற்றியவாறு திருமண கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த இத்தலத்திற்கு த்வியம் விளைந்த திருப்பதி என மற்றொரு பெயரும் உண்டு. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து ஆனி மாதத்தில், வருடாந்திர பிரம்மோத்சவ விழா துவங்கி, கொடியேற்றம் விமரிசையாக நடந்தது. ஆனி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று இரவு மலர் அலங்காரத்தில், யானை வாகனத்தில் கருணாகர பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !