மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை
ADDED :7 hours ago
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திரு விளக்கு பூஜை நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஆனிமாத பவுர்ணமியை முன்னிட்டு திரு விளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6.00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் சிவன், விநாயகர், முருகர் என குடும்பத்துடன் கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. கோவில் பூசாரிகள் திருவிளக்கு பூஜையை நடத்தினர். திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு சேலை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறையினர், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.