சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்
சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனி பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது.
தென் திருப்பதி என அழைக்கப்படும் சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா அதி விமர்சியாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு ஜூன் 22 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் பெருமாள் சுவாமி நகர்வலம் வந்தார்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 8 45 மணிக்கு துவங்கியது. ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் பெருமாள் சுவாமி காலை 7:00 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். காலை 8:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர் பகல் 2:30 மணிக்கு நிலையை அடைந்தது. சாத்துார் டி.எஸ்.பி. குருசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.