/
கோயில்கள் செய்திகள் / நாளை முதல் கோவில்களில் தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது: இந்து சமய அறநிலையத்துறை
நாளை முதல் கோவில்களில் தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது: இந்து சமய அறநிலையத்துறை
ADDED :6 hours ago
மதுரை: கோவில்களில், குத்தகைக்கு எடுத்த தனியார் மூலம் நாளை முதல் பிரசாதம் வழங்கப்படாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே பிறப்பித்த அரசாணைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் என தெரிவித்துள்ளனர்.