உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன உற்சவம்; தோப்பு உற்சவத்தில் திருவந்திபுரம் தேவனாத சுவாமி

வன உற்சவம்; தோப்பு உற்சவத்தில் திருவந்திபுரம் தேவனாத சுவாமி

நெல்லிக்குப்பம்:  திருவந்திபுரம் தேவனாதசுவாமி தோப்பு உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பெருமாளுக்கு ஒவ்வொரு மாதமும், பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேகமும், உற்சவமும், தீர்த்தவாரியும் நடக்கும். தை மாதம் ஆற்றிலும், மாசி மாதம் கடலிலும் தீர்த்தவாரி நடக்கும். ஆனி மாதம் பவுர்ணமியன்று வன உற்சவம் என்று சொல்ல கூடிய தோப்பு உற்சவம் நடப்பது வழக்கம். இதற்காக திருவந்திபுரம் தேவனாத சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் நெல்லிக்குப்பம் தோப்பு உற்சவம் மண்டபத்தில், எழுந்தருளினார்.  அங்கு சிறப்பு பூஜைகள் நடந்து வன உலாவும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவி சமேதராய் தேவனாத சுவாமி வீதி உலாவும் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !