உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நத்தம்: நத்தம் அருகே குட்டூர் விலக்கு சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நத்தம் சீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் குட்டூர் விலக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சாய்பாபா கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதையொட்டி ஜூன் 29ல் யாகசாலை அமைத்து கணபதி பூஜை, புண்யாகம், கணபதி, நவக்கிரஹ ஹோமம், சூக்த ஹோமம், பூர்ணாஹூதி, விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, பிரவேசபலி, திசா ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.ஜூன் 30ல் முதல் கால ேஹாமம், ஜூலை 1ல் இரண்டாம் கால ேஹாமம், கோபுர கலசம், மூல பிம்ப பிரதிஷ்டை, மூன்றாம் கால ேஹாமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

நேற்று காலை நான்காம் கால ஹோம பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க புனித தீர்த்த குடங்கள் புறப்பாடு நடந்தது. கோயிலை சுற்றி வந்ததும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஜெயந்தி, விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !